Wednesday, April 8, 2009

சுரதா

சுரதா என்ற அற்புத கவிஞ்ஞன் எனக்கு பல ஆண்டுகள் தொடர்பு இருந்தது என் வாழ்வின் பாக்கியமே .முரண்பட்ட மனிதனின் முழுமையான வாழ்கையை நான் அவரிடமே கண்டேன் .ஆகாயத்தை நோக்கிய பார்வை , பூமியின் மீது பேச்சு , இதுவே அவரது மூச்சு .
அவர் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்லர் .ஆனால் தந்தை பெரியார் கொள்கைகளில் வேர்யூன்றியவர் .அவருக்கு அவரைத்தவிர வேறு யாரையும் பிடிக்காது .

மூன்று முதல் அம்மைச்சர்களை சந்தித்தவர் அவர்ஆனால் எந்த முதல் அமைச்சரிடமும் அவர் மண்டி இட்டது இல்லை .தனக்கென்று எதுவும் கேட்டதும் இல்லை .வறுமை அவரை வாட்டியதும் இல்லை . ஆனாலும் அவர் வறுமைகள் தான் வாழ்ந்தார் .புலவர்தான் அவர் .ஆனாலும் அமைச்சர்களை நாடி வறுமையை போக்கிக்கொள்ளவில்லை .

சுரதாவின் ஆரம்ப நாட்கள் கவி வேட்கையில் பாரதிதாசனை பார்க்க நடைபயணம் செய்ய தூண்டியது .கை செலவுக்கு சுவரில் சுண்ணாம்பு அடித்து காசு சம்பாதித்து சென்னை சேர வைத்தது .அதனால்தான் பின்னாளில் தன் நூல் ஒன்றுக்கு சுவரும் சுண்ணாம்பும் என்று பெயர் வைக்க நேர்ந்தது .தனது பெயரை மாற்றி சுப்பு ரத்தின தாசன் என்று மாற்றி கொண்டார் .இதுவே பின்னர் சுரதா ஆயிற்று .










Wednesday, April 1, 2009

niraikudam: இன்று

niraikudam: இன்று

இன்று

நேற்று என்பது நாம் நினைத்து பார்க்க வேண்டாத ஒன்று .
நாளை நல்லதே நடக்கும் .
இன்று நடப்பதே மகிழ்ச்சி .